எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.- 10 - அண்ணா பவள விழா நினைவு வளைவை அகற்றும் முடிவு தி.மு.க. ஆட்சியில் தான் எடுக்கப்பட்டது. இடிக்க நான் அனுமதி அளித்ததாக கூறுவது ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட கருணாநிதியின் கபட நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது. தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, ... அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல, அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல் அமைச்சர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீnullண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது nullநீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?... என்று வினவியிருக்கிறார். அதாவது, சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 2010ஆம் ஆண்டு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது தான், 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை. அரசின் அனைத்து முடிவுகளும் முதலமைச்சர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா? அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளாரா? அல்லது அரசு நிர்வாகம் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே முதலமைச்சராக காலத்தை தள்ளிவிட்டு இது போன்ற கேள்வியை தனக்குத் தானே எழுப்பி பதிலளிக்கிறாரா என்பதற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தான் பதில் சொல்ல வேண்டும்.
மேம்பாலம் அமைத்திட முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் முடிவெடுக்கப்பட்ட போதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத் தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா? ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டு விட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்! எது எப்படியோ, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.
அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியின் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில், ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன்.
எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று nullநீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி
15 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைக
-
79-வது சுதந்திர தின விழா: காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: முதல்வர் மு.கஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
-
சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாது
-
விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2025சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ
-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம்: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு: மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும்
15 Aug 2025புதுடெல்லி, தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
-
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை
15 Aug 2025புதுடெல்லி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
15 Aug 2025சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்த
-
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
15 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
15 Aug 2025புதுடெல்லி, “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
-
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 Aug 2025பெரம்பலூர், தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை வி.சி.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு
15 Aug 2025ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
-
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்: வாழ்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்
15 Aug 2025சென்னை, 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்திற்காக தன்னை வாழ்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
-
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
15 Aug 2025புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
-
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
15 Aug 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் விடுமுறை தினமான நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000-க்கு பாஸ் வழங்கும் திட்டம் அமலானது
15 Aug 2025புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது.
-
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவோம்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
15 Aug 2025சென்னை, நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
15 Aug 2025தென்காசி, குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
-
தவறான கருத்துகளை பரப்பினால்... பாக்.கிற்கு இந்தியா கடும் எச்சரிக்கை
15 Aug 2025புதுடெல்லி, பாகிஸ்தான் இந்தியா குறித்து தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளா
-
புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை உயர்வு: கவர்னர் கைலாஷ்நாதன் அறிவிப்பு
15 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட
-
காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
15 Aug 2025டெல்அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
15 Aug 2025சென்னை, நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
-
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
15 Aug 2025மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நடுவானில் விமானத்தில் கோளாறு: சென்னையில் அவசர தரையிறக்கம்
15 Aug 2025சென்னை, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.