முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      உலகம்
Putin-2025-08-15

மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவின் முத்தாய்ப்பான டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டு இருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், “அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்திய - ரஷ்ய ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து