முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழாக்கோலம் பூண்ட தூத்துக்குடி: பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      ஆன்மிகம்
Panimayamatha 2025-07-26

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி முடிந்ததும் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 

அப்போது அங்கு கூடியுருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் 'மரியே வாழ்க' என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். பின்னர் சமாதானச் சின்னமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழாவையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து