Idhayam Matrimony

சர்வதேச யோகா தினம் - நோய் நாடி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: கோவிட் காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை யோகா ஏற்படுத்துகிறது என்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பேசினார்

ஜூன் 21ம் தேதி 7 வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து மோடி தொலைக்காட்சியில் பேசினார்.

யோகா குறித்து அவர் மேலும் பேசியதாவது, 'ஜூன் 21ம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‛ஆரோக்கியத்திற்கு யோகா' என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள். 

அனைவரும் உடல் நலம் மற்றும் மனநலம் பெற வாழ்த்துகிறேன். கோவிட் நேரத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. கோவிட் தொற்று நம் அனைவரையும் யோகாவை மறக்கச் செய்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியான கோவிட்டை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். யோகா நமக்கு உள் வலிமையை கூட்டுகிறது. உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் அடிப்படை நோக்கமாக யோகா கொண்டுள்ளது. யோகா எதிர்மறை சக்தியுடன் எதிர்த்து போராட உதவுகிறது

தெய்வப் புலவர் ‛திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல்' இத்திருக்குறள் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

முன்பு போல் யோகா நிகழ்ச்சிகள் தற்போது கோவிட் காரணமாக நடத்தப்பட முடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் யோகாவை தங்களின் பாதுகாப்பு ஆயுதமாக கடைப்பிடித்து வந்தனர். யோகா பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நம் முன்னோர்களும், சாதுக்களும் யோகாவை ஆரோக்கியத்தின் அளவீடாக கருதி வந்தனர். நாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம் நாம் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும். யோகா செயலியின் மூலம் இது உலகம் முழுவதும் பிரபலமடையும்'. இவ்வாறு மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து