எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.
துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த முதல்வர் அறிவுரை வழங்கினார்.
பாரம்பரியம் மாறாமல் கதர் பட்டு உற்பத்தியில் புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த ஏதுவாகப் பட்டு நெசவாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மேலுறைப் பெட்டிகளில் வடிவமைப்பு மற்றும் பல வண்ணக் கலவைகளில் புதுமைகளைப் புகுத்தி சோப்பு, தேன் மற்றும் இதர பொருட்களை மக்களைக் கவரும் வகையில் மாற்றம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
கதர் கிராமப் பொருட்களைத் தீவிர சந்தைப்படுத்தும் விதமாகக் கல்லூரிகள் மற்றும் வர்த்தக மையங்களில் கண்காட்சிகள் அமைத்தல், சிறப்பு அங்காடிகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் தனியே இருப்பு அடுக்கு அமைத்தல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் தனிச் செயலியை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பனை வெல்ல உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, சந்தையில் தரமான பனை வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனைவெல்ல உற்பத்தி மற்றும் விற்பனைக் கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு தற்போது இலாபகரமான தொழிலாக உள்ளதால் பட்டுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக மல்பெரி பயிரிடும் பரப்பினை ஒரு லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கச்சா பட்டிற்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால் கச்சா பட்டு உற்பத்தியினைச் சுமார் 3100 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், படித்த இளைஞர்கள் இதில் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
பட்டு விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கப்பெற ஏதுவாக அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மின்னணு ஏல முறையினை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் வெண்பட்டு உற்பத்தியினை விரிவுபடுத்த ரூ.1000 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திட வரைவுத் திட்ட அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்து அத்திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையங்கள் மூலம் நடைபெறும் விற்பனையை ரூ.35 கோடியிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடியாக உயர்த்துவதற்கு விற்பனை நிலையங்களைப் புதுப்பித்து, கைவினைஞர்களிடமிருந்து தரமான படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்தி, நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கும், இந்நிறுவனம் கொண்டுள்ள இணைய வழிச் சேவையை மேலும் விரிவுபடுத்தி உலகத்தின் எந்த இடத்திலுமுள்ள வாடிக்கையாளரும் கொள்முதல் செய்யும் வண்ணம் செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், கைவினைஞர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வண்ணம் விற்பனை நிலையங்களிலும், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களில் கண்காட்சி விற்பனை நடத்துவது குறித்தும், தமிழக மற்றும் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் கைவினைஞர்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மகளிர் கைவினைஞர்களுக்குப் பயிற்சிகள் நடத்துவது, சிறந்த கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டங்கள் அமைய வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழகக் கைவினைப் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெறப்பட்ட மாமல்லபுரம் கற்சிற்பங்கள், சுவாமிமலைப் பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், நாச்சியார் கோவில் பித்தளைக் குத்து விளக்குகள் மற்றும் பத்தமடை பாய் போன்ற கைவினைப் பொருட்களின் சிறப்புகளை வாடிக்கையாளரிடம் எடுத்துச் சென்று, அந்தக் கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்புக் கண்காட்சிகள் நடத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.
மாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலாக் கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல் மற்றும் நிரந்தர விளம்பரப் பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றைக் கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சித் திடல்களை, கைவினைஞர்களுக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிறுவனம் 2023-ம் ஆண்டு 50-ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாகப் பொன்விழாவினைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களைக் கௌரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, முதன்மைச் செயலாளர்/கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஷோபனா, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் பொ.சங்கர், பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் கைதுக்கு ராஜபக்ச கண்டனம்
23 Aug 2025இலங்கை : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம்: வரும் செப். 1 முதல் தொடக்கம்
23 Aug 2025சென்னை : அ.தி.மு.க.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
வருடாந்திர உச்சி மாநாடு: பிரதமர் மோடி 29- தேதி ஜப்பான்-சீனா பயணம்
23 Aug 2025புதுடெல்லி, பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.
-
தூய்மை பணியாளர் பலி: 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும்: அமைச்சர் தகவல்
23 Aug 2025சென்னை, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்க்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
அனில் அம்பானி இடங்களில் சோதனை
23 Aug 2025புதுடெல்லி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் : ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
23 Aug 2025டெல் அவிவ் : காசா நகரை முற்றுகையிட இஸ்ரேல் ராணுவத்துக்கு அனுமதி வழங்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து பாதுகாப்பு அ
-
எஸ்.சுதாகர் ரெட்டி மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
23 Aug 2025சென்னை : எஸ்.சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்,
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
23 Aug 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசாக தி.மு.க. மாடல் அரசு உள்ளது: சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Aug 2025சென்னை, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ நியமனம்
23 Aug 2025நியூயார்க் : இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் எரிக் கார்செட்டி.
-
உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம-தேடும் பணி தீவிரம்
23 Aug 2025உத்தரகாண்ட் : உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியு
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: செப்டம்பர் 24 வரை நீட்டிப்பு
23 Aug 2025புது டெல்லி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.