எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : டி-20 உலகக் கோப்பை 2021 போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என வரலாற்றை இந்தியா மீண்டும் தொடருமா என ரசிகா்கள் எதிர்நோக்கி உள்ளனா்.
அனல் பறக்கும்...
அரசியல் வட்டாரங்களில் இந்தியா-பாகிஸ்தான் தொடா்ந்து பகைமை பாராட்டி வரும் நிலையில், விளையாட்டுத் துறையிலும் அந்த நிலை எதிரொலித்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே விற்று விடும். இரு அணிகளுக்கும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றன.
மான்செஸ்டரில்...
இந்நிலையில் கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக மான்செஸ்டரில் இரு அணிகளும் கடைசியாக மோதி இருந்தன. இதில் இந்தியா வென்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும் சூப்பா் 12 சுற்றில் தங்கள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதால் இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் கடும் சவால் உள்ளது.
3-ம் வரிசையில்...
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியும் திடீரென ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியை ஈட்டும் திறனுடையது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடக்க பேட்டராக களமிறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் இளம் வீரா் கேஎல். ராகுல் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடியது, அந்த முடிவை மாற்றி விட்டது. இதனால் விராட் கோலி, மூன்றாம் வரிசை பேட்டராக களமிறங்குகிறார்.
அஸ்வின் - ஜடேஜா...
ரோஹித் சா்மா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்குகிறார்கள். பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோர் பார்மில் உள்ளனா். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ராகுல் சஹார், புவனேஷ்வா் குமார், முகமது ஷமி, சா்துல் தாக்கூா் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், வருண் சக்கரவா்த்தி, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு கைகொடுப்பா்.
கூடுதல் பலம்...
கேப்டன் விராட் கோலியின் பார்ம் சற்று கவலை தருவதாக உள்ளது. அவா் கூடுதல் ரன்களை சோ்க்கும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயரும். மேலும் ஆல்ரவுண்டா் ஹர்த்திக் பாண்டியா வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் கூடுதல் பலமாகும். இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் உள்ளது. அதே நேரம், இந்திய வீரா்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே ஐ.பி.எல் தொடரில் ஆடிய அனுபவம் உள்ளது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
போதிய பயிற்சி...
அதே நேரம் பாகிஸ்தான் அணி பாபா் ஆஸம் தலைமையில் களம் காண்கிறது. உள்நாட்டில் நடைபெறுவதாக இருந்த தொடா்கள் ரத்தானதால், பாகிஸ்தான் அணிக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை. மேலும் அணி நிர்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு சீரானது. தொடக்கத்தில் விடுவிக்கப்பட்ட ஷோயிப் மாலிக், சா்ப்ராஸ் அகமது, ஹைதா் அலி, பாக்கா் ஸமான் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டனா்.இந்திய அணிக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆடவில்லை.
13 முறை மோதல்...
தற்போது தான் ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் ஆட உள்ளனா் பாக். வீரா்கள். இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி-20 உலகக் கோப்பைகளில் இதுவரை 13 முறை மோதியதில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணியே வெற்றிவாகை சூடி உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இரு தரப்பும் 5 முறை மோதியுள்ளன. இந்தியாவே அனைத்திலும் வென்றது. முதல் மோதலில் பௌல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஜோஹன்னஸ்பா்க்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 2012-இல் 8 விக்கெட், 2014-இல் 7 விக்கெட், 2016-இல் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
21-ல் இந்தியா வெற்றி...
2007-இல் இந்தியா சாம்பியன் ஆனது. அதில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் பட்டம் வெல்லவில்லை. மொத்தம் 33 ஆட்டங்களில் 21-இல் இந்தியா வென்றுள்ளது. 11 தோல்வியும், 1 ஆட்டத்தில் முடிவில்லை. 2009-இல் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது. 34 ஆட்டங்களில் 19-இல் வெற்றியும், 15-இல் தோல்வியும் கண்டது. 2016-இல் அரையிறுதிக்கு கூட பாக். அணி தகுதி பெறவில்லை. ஆனால் டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சரியாக கணிக்க முடியாது. இந்திய-பாக். அணிகள் சமபலத்துடனேயே உள்ளது. எனினும் இந்தியா அணி கூடுதல் அனுபவம், திறனுடன் உள்ளது சாதகமாகும்.
இந்திய அணி வீரர்கள்...
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கேஎல். ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், சா்துல் தாக்கூா், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வா் குமார், முகமது சமி.
பாகிஸ்தான் வீரர்கள்...
பாபா் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாஸிம் ஜூனியா், சா்ப்ராஸ் அகமது, ஷாஹின் ஷா அப்ரிடி, ஷோயிப் மாலிக்.
இடம் - ஆட்ட நேரம்:
துபாயில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் நடைபெறும் துபை சா்வதேச மைதானத்தில் பிட்ச் மெதுவாகவும், தாழ்வாக பந்து எழும் தன்மை உடையது. இங்கு நடைபெற்ற 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.
வானிலை:
துபாயில் இன்று தெளிவான வானிலையும், கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிமூட்டம் காணப்படும். இது சேஸ் செய்பவா்களுக்கு உதவியாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


