முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதி படங்களை எடுக்காதீர்கள் – இயக்குனர்கள் கோவம்

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் உசேன்  தயாரிப்பில், ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். ஜாதி மதம் என்பது இல்லவே இல்லை சமூகத்தில் அனைவரும் ஒன்றே என்பதனை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் தான் இந்த முதல் மனிதன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில்  முதல் மனிதன் பட இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது… உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லி இருக்கிறேன் என்றார். பின்னர் பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், சினிமாவில் தான் ஜாதி பற்றி அதிக படம் எடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் என ஒரு சிலர் சினிமாவில் பேசுகின்றனர். யாரும் சினிமாவில் தாழ்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் பேரரசு பேசுகையில், தற்போது, ஜாதி கலவரம் தூண்டுவது போல் படங்கள் எடுக்கிறார்கள். ஜாதியை பார்த்து உதவி இயக்குநர்களை, நடிகர்களை தேர்வு செய்ய கூடாது. சினிமா அனைவருக்கும் பொதுவானது. சினிமா தியேட்டரில் மட்டும் தான் ஜாதி பார்க்க முடியாது. ஜாதியை வைத்து யாரும் படம் எடுக்காதீர்கள். ஜாதிய படங்களை எடுப்பவர்களை சினிமா துறையில் இருந்து ஒழிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து