முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நண்டு சூப்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

நண்டு சூப் செய்யத்  தேவையான பொருள்கள்; 

  1. நண்டு -1/4 கிலோ.
  2. கறிவேப்பிலை,கொத்தமல்லி,புதினா - சிறிதளவு.
  3. தக்காளி - 1.
  4. சின்ன வெங்காயம் - 25 கிராம்.
  5. பச்சை மிளகாய் - 1.
  6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
  7. நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்.
  8. சோம்பு – 1 சிட்டிகை.
  9. சீரகம் – 1 சிட்டிகை.
  10. இஞ்சி பூண்டு விழுது -25 கிராம்.
  11. உப்பு - தேவையான அளவு.
  12. கறி மசால் தூள் - சிட்டிகை.
  13. மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்.
  14. மிளகு தூள் -1/2 ஸ்பூன்.
  15. தனியா தூள் -1/2 ஸ்பூன்.

 

 

Method: 

 

செய்முறை ;-

  1. அடுப்பில் கிடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன் 1 சிட்டிகை சீரகம், 1 சிட்டிகை சோம்பு போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் சின்ன வெங்காயம் 25 கிராம்,ஒரு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது 25 கிராம் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக  வதக்கவும்.
  4. நறுக்கி வைத்த ஒரு தக்காளி,சிறிதளவு கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி வதக்கவும்.                                         
  5. இதனுடன் சுத்தம் செய்த நண்டுக் கால்களை போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/2 ஸ்பூன் தனியா தூள்,1/2ஸ்பூன் கறிமசால் தூள்,மற்றும் 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் போட்டு வதக்கவும்.
  7. பிறகு 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கிடாயை மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
  8. நன்கு கொதி வந்தவுடன் மல்லி புதினா போட்டு கலந்து விட்டு
  9. அடுப்பில்  வைத்து 1 கொதி வந்த உடன் இறக்கி விடவும்.
  10. சுவையான நண்டு சூப் ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago