எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கான்பூரில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகமாகிறார், கேப்டன் அஜின்கயே ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தொடராக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2 போட்டிகள்...
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன்...
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களுக்குப்பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ இன்று தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய வீரர்கள்...
ராகுலுக்கு காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார், விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் ஆகிய 3 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் இந்திய அணி களம் காண்கிறது. இது தவிர ரிஷப்பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. ஆனால், சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், ரவிந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
நடுவரிசையில்...
வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா இருவருக்கு கட்டாயம் இடமுண்டு, கான்பூர் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தால், 3-வது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பில்லை. ராகுல், ரோஹித் சர்மா இல்லாததால், மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்குவார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் நடுவரிசையில் களம்காண்பார். ரஹானே, புஜாரா என நடுவரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள்.
பேட்டிங் ஃபார்ம்...
கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் ரஹானேவின் பேட்டிங்கை வைத்துதான் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்பதால் ரஹானேவுக்கு இது முக்கியமான டெஸ்ட் தொடராகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்குச் சென்ற ரஹானே 7 இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.57 சராசரிவைத்துள்ளார். அதிகபட்சமாக 61 ரன்களை ரஹானே சேர்த்தார். ஆனால், ரஹானேவைவிட ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ராவின் சராசரி இந்தத் தொடரில் அதிகமாக இருந்தது.
மீண்டும் நம்பிக்கை...
இங்கிலாந்து தொடருடன் ரஹானே அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருப்பார், ஆனால், லாட்ர்ஸ் மைதானத்தில் ரிஷப் பந்த்துடன் சேர்ந்து அரைசதம் அடித்தபின் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை ரஹானே பெற்றுள்ளார். இந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் ரஹானே ஃபார்முக்கு வராவிட்டால், அணியிலிருந்து ரஹானே ஒதுக்கப்படுவது உறுதியாகிவிடும். நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ் டெஸ்ட் தொடருக்கு திரும்பியுள்ளார். போல்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஜேமிஸன், சவூதி, நீல் வாக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சில் அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா, சான்ட்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் ஈஷ் சோதி சேர்க்கப்படவி்ல்லை.
ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்.
உத்தேச இந்திய அணி
1) சுப்மன் கில். 2) மயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) ஷ்ரேயாஸ் ஐய்யர், 5) ரஹானே (கேப்டன்), 6) சாஹா(விக்கெட் கீப்பர்), 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) ஆர் அஸ்வின், 10) முகமது சிராஜ், 11) இஷாந்த் சர்மா, 12) உமேஷ் யாதவ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Jan 2026- கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரவையில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேர்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
26 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
26 Jan 2026



