முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக ரூ.129.59 கோடி வைப்புநிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினார்.

போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது நடைபெறுவதற்கு ஏதுவாக பெரிய திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி உதவி செய்யும் விதமாக, ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டித்தொகையிலிருந்து திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கிட வழிவகை செய்யப்பட்டது.

தற்போது, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை முதல்வர், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக வழங்கினார். இதன்மூலம் திருக்கோயில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைக்கப்பெறுவதால், பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, ஒருகால பூஜை மேற்கொள்ளும் திருக்கோயில்களைச் சேர்ந்த அர்ச்சர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் ஆகியோர் கூடுதலாக நிதி வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து