முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 ஆண்டுகளுக்கு பின் குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பிரிட்ஜ்டவுன் : 400 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசு நாடாக பார்படாஸ் தீவு மாறியுள்ளது. மேலும் 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் பார்படாஸ் தீவு உறுப்பினராக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். 3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த குட்டித்தீவு சுமார் 400 ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தின் கிழ் இருந்து வந்தது. இந்த தீவு 1996-ல் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், ராணி 2-ம் எலிசபெத்தே அதன் தலைவராக நீடித்தார்.

இந்த சூழலில் கடந்த 20 ஆண்டுகளில் இந்த தீவு, காலணி ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்தது. அதன்படி பார்படாஸ் நாடாளுமன்றம் தீவின் முதல் அதிபரை கடந்த மாதம் தேர்வு செய்தது. தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்து வந்த சாண்ட்ரா மோசன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பார்படாஸ் தீவு, சுதந்திர குடியரசாக மாறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு பார்படாஸ் அதிகாரபூர்வமாக குடியரசாக மாறியது. இதை கொண்டாடும் வகையில் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் கோலாகல விழா நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார். பார்படாசின் கொடி, சின்னம் மற்றும் தேசிய கீதம் அப்படியே இருக்கும் எனவும், ஆனால் சில குறிப்புகள் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பார்படாஸ் 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து