முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இட்லி உப்புமா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

இட்லி உப்புமா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. இட்லி – 3.
  2. வெங்காயம் – 1/2.
  3. பச்சை மிளகாய் – 2.
  4. கறிவேப்பிலை,கொத்தமல்லி -சிறிதளவு.
  5. தேங்காய் துருவல்  - 1 ஸ்பூன்.
  6. ரிபைன்ட் ஆயில் - 1 ஸ்பூன்.
  7. கடுகு,உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு - சிறிதளவு.
  8. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

  1. 3 இட்லியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. சிறிதளவு தேங்காய் எடுத்து துருவி தேங்காய் பூவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  4. நன்கு காய்ந்த உடன் ரிபைன்ட் ஆயில் ஒரு ஸ்பூன் ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு வதக்கவும்.
  6. நறுக்கிய ½ வெங்காயம், நறுக்கிய 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்தமல்லி  சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  7. தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  8. உதிர்த்து தயார் செய்து வைத்துள்ள 3 இட்லியை போட்டு வதக்கவும்.
  9. இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்துவிட்டு ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.
  10. தேவையெனில் சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  11. பொடியாக நறுக்கிய மல்லியை சிறிதளவு போடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான இட்லி உப்புமா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago