முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் சேதம் அடையாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

வெள்ளத்தால் சேதமடையாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினி ராஷ்டிரிய புரஸ்கார் பால் விருது பெற்றார்.

2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது, கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தீரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.  ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுக்காக நாடு முழுவதும் 29 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விருது பெறும் குழந்தைகளுக்கு ஒரு பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ்கள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த ஆண்டு முதன்முறையாக இந்த விருது பெறுவோருக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த விசாலினி என்ற சிறுமி, வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்ததற்காக கண்டுபிடிப்பு பிரிவின் கீழ் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகி இருந்தார். இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் விசாலினி விருது மற்றும் ரொக்கப்பரிசு 1 லட்சம் ரூபாயை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து