முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு: நவ. -28 -​இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக ்ழத் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. ்ழத் தமிழர் பிரச்சனையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வந்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் மீண்டும் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த கூட்டத்துக்கு முன்பாக இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ்ழத் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுகளுக்கு பின்னர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் அமெரிக்கா தீவிரம் காட்டும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் அமெரிக்காவின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் உறுதிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டும் அமெரிக்காவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அந்நாட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago