முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாட்டுக்கோழி மிளகு கறி

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

நாட்டுக்கோழி மிளகு கறி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நாட்டுக் கோழிக்கறி - 1/2 கிலோ.
  2. பெரிய வெங்காயம் - 1.
  3. கறிவேப்பிலை,மல்லி,புதினா - சிறிதளவு.
  4. மிளகுத்தூள் - 3 ஸ்பூன்.
  5. பச்சை மிளகாய் - 1.
  6. கல் உப்பு - தேவையான அளவு.
  7. சீரகத்தூள் - 2 ஸ்பூன்.
  8. சின்ன வெங்காயம் - 100 கிராம்.
  9. இஞ்சி,பூண்டு - 100 கிராம்.
  10. நல்லெண்ணை – 100 மல்லி.

 

Method: 

செய்முறை ; 

  1. சுத்தம் செய்த இஞ்சி 50 கிராம் மற்றும் பூண்டு 50 எடுத்து ஒரு மிஸ்சி  ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. 100 கிராம் சின்ன வெங்காயத்தையும் மிஸ்சி  ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணை 100 மில்லி உற்ற வேண்டும்.
  4. எண்ணெய் சூடானவுடன் நறுக்கி வைத்த ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. சிறிதளவு கறிவேப்பிலை,மல்லி, மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் 100 கிராம் சின்ன வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.
  7. இஞ்சி மற்றும் பூண்டு விழுதை  100 கிராம் போட்டு வதக்கவும்.
  8. நறுக்கி வைத்த ஒரு பச்சை மிளகாய்யை போட்டு வதக்கவும்.
  9. சுத்தம் செய்த நாட்டுக் கோழிக்கறி  1/2 கிலோ போட்டு வதக்கவும்.
  10. மிளகுத்தூள்  3 ஸ்பூன்,சீரகத்தூள் -2 ஸ்பூன், மற்றும் கல் உப்பு - தேவையான அளவு போட்டு வதக்கவும்.
  11. 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
  12. சிறிதளவு மல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  13. சுவையான நாட்டுக்கோழி மிளகு கறி ரெடி.



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago