முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மை 3

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Hansika 2022 04 18

Source: provided

டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடருக்கு “மை 3”  என்று பெயரிட்டுள்ளது. ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்த இணைய தொடரை ராஜேஷ்.M இயக்குகிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் இதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கார்த்திக் முத்துக்குமார். இசை கணேசன். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறுகையில், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இது என்னுடைய முதல் இணைய தொடர்.  இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும் என்றார். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குநர் ராஜேஷ்.M கூறுகையில், ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. இந்த  ‘மை3’ தொடர், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து