எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 பேருக்கு ஆயுள் தண்டனை...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில்...
இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு அனுமதிக்காததால் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது.
நீதிபதிகள் அதிருப்தி...
வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக கவர்னர் நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். இது வருத்தம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
வாதங்கள் முடிந்து...
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.
ஜனாதிபதி மட்டுமே...
அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில் இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. கவர்னர் இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது ஜனாதிபதி மட்டுமே முடிவு எடுக்க முடியும் என கோரப்பட்டிருந்தது.
பேரறிவாளன் தரப்பில்...
பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
சிறப்பு அதிகாரத்தை...
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று காலை தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது., பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் கவர்னர் தாமதம் செய்தது தவறாகும். எனவே 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார். 161-வது சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே எங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர்.
31 ஆண்டுகளுக்கு பிறகு...
ராஜீவ் கொலை கைதிகள் வழக்கில் 31 ஆண்டுகளுக்கு பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கி உள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டையோ, தமிழக கவர்னரின் அதிகார வரம்பையோ கருத்தில் கொள்ளாமல் தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து இருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு மிகுந்த பின்னடைவாகும்.
சீராய்வு மனு தாக்கல் ?
ராஜீவ் கொலை கைதிகளை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அந்த அதிரடியை நிகழ்த்தி உள்ளது. எனவே சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் குழு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆகையால் பேரறிவாளனை தொடர்ந்து தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரும் பேரறிவாளன் வழியில் சுப்ரீம்கோர்ட்டை அணுக வழிவகை ஏற்பட்டு உள்ளது.
தலைவர்கள் வரவேற்பு...
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீர்ப்பின் 8 முக்கிய அம்சங்கள்
1) கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
2) அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.
3) 161-வது சட்டப் பிரிவின் கீழ் கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.
4) முடிவெடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.
5) உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.
6) இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
7) பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
8) பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
21 Feb 2026மதுரை, மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி
21 Feb 2026புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!
21 Feb 2026சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நா
-
சங்பரிவார் சேவகராகவே மாறிய இ.பி.எஸ்: கனிமொழி விமர்சனம்
21 Feb 2026சென்னை, சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு
21 Feb 2026டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
-
தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த பாகிஸ்தான தீவிரவாதிகள் திட்டம்: உளவு துறை எச்சரிக்கை - தீவிர கண்காணிப்பு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.
-
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரியை விதித்த ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்ற
-
தமிழருக்கு அ.தி.மு.க. அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
21 Feb 2026சென்னை, அ.தி.மு.க. என்றென்றும் மக்களுக்கு அரணாக விளங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
21 Feb 2026சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.
-
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
21 Feb 2026சென்னை, எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் பாஸ்டேக், யு.பி.ஐ. மூலம் மட்டும் கட்டணம் வசூல்
21 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் 1சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு அவமானத்துக்குரியது: ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள்
-
தாய்மொழி உடலுக்கு உயிர்: உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவு
21 Feb 2026சென்னை, தாய்மொழி உடலுக்கு உயிர் என்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
வார ராசிபலன்
21 Feb 2026


