முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
IIT 2022-05-20

Source: provided

சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.

இந்தியாவில்  5 ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என பிரதமர் மோடி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

5 ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும். இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6 ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கி விட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக 5 ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை மத்திய அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலிருந்து சோதித்துப் பார்த்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 5 ஜி ஆடியோ கால் சேவையை ஐ.ஐ.டி. சென்னை வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தேன். ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெட்வொர்க் என்று பதிவிட்டுள்ளார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது பிரதமரின் கனவு. அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4 ஜி, 5 ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார்.

இது இந்திய உலகத்துக்காக உருவாக்கிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து