எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக புதிய குழுக்களை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாத நிலையில் அவரது ஐபேக் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணியாற்றிய சுனில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதற்கிடையே ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) என்ற பெயரில் இயக்கம் தொடங்கப் போவதாகவும், பீகாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணையாவிட்டாலும் அவர் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்க அடுத்தடுத்து கூட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸை மறு சீரமைப்பு செய்ய பிரசாந்த கிஷோர் பரிந்துரை அளித்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு 2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. நாடுதழுவிய அளவில் காங்கிரஸில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சோனியா காந்தி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரக் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக்விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகிய 8 முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பணிக்குழு 2024-ல் சிதம்பரம், பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கன் மற்றும் சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சுனில் கனுகோலு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். அதன் பிறகு தனியாக பிரிந்து தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
மத்திய திட்டமிடல் குழுவில் திக்விஜய சிங், சச்சின் பைலட், மக்களவை எம்.பி.க்கள் சசி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போர்டோலோய், கே.ஜே. ஜார்ஜ், ஜிது பட்வாரி மற்றும் சலீம் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி ஜோடோ யாத்ரா என்ற பெயரில் அக்டோபரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேரணி நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த யாத்திரையில் மத்திய அரசின் கொள்கைகளால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல், மதச்சார்பின்மை மீதான தாக்குதல் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் லாபம் ஈட்டுதல் போன்றவை ஏற்படுவதை முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதற்காக ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள், குழுக்கள், சமூக குழுக்களை ஒருங்கிணைத்து இந்த யாத்திரையை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 13 மாநிலங்களில் 3,500 கிலோ மீ்ட்டர் தூரம் இந்த யாத்திரை பயணிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


