முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 20,044 பேருக்கு கொரோனா தொற்று: இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு

சனிக்கிழமை, 16 ஜூலை 2022      இந்தியா
Corona 2022 01 01

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நாட்டில் மொத்தபாதிப்பு 4 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் கேரளாவில் 27 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 56 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 18,301 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது. தற்போது 1,40,760 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நேற்று முன்தினத்தை விட 1,657 அதிகம் ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் 22,93,627 டோஸ்களும், இதுவரை 199 கோடியே 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து