முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜகதீப் தங்கர் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Jagdeep Dhankar 2022-08-10

Source: provided

புதுடெல்லி : துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததை அடுத்து நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கருக்கு இன்று பதவியேற்க்கவுள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது. துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபாவின் தலைவராகவும் இருப்பார். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர்வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர். துணை ஜனாதபதிக்கான தேர்தலில், 725 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மொத்த எம்.பி.,க்களில், 92.94 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. 

இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் அமோக வெற்றி பெற்றார். இவர் இன்று நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக பதவி யேற்க உள்ளார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் அப்பதவிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விருந்து அளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை ஓம் பிர்லாவும் ஜகதீப் தன்கரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெங்கையா நாயுடுவும் ஓம் பிர்லாவும் ஜகதீப் தன்கருடன் தேசிய நலன், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி மாநிலங்களவைத் தலைவராகவும் இருக்கிறார்.

ஜகதீப் தங்கர் பொறுப்பேற்ற பின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் தலைவர்களாகவும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து