எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சியில் அரசுப் பள்ளியில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வானவில் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல் ஆய்வகத்தையும் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 200 அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வரையிலான மாணவ மாணவிகள் மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பாடங்களில் புதிய செயல்முறை விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வானவில் மன்றம் மூலம் 20 பள்ளிகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு என முதல் கட்டமாக ரூ. 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வானவில் மன்றத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒளி பாதை செயல்முறை விளக்க அறிவியலை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்கள் சு.திருநாவுக்கரசர், திருச்சி சிவா, பள்ளிக்கல்வித்துறை முதுமைச் செயலாளர் காகர்லா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், உஷா மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இருதயராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதீப்குமார் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா


