முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Anna-University 2022 12 -09

Source: provided

சென்னை : மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல் சென்னை பல்கலைக் கழகம் , அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதைத்தொடர்ந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் புயலின் பாதிப்புகள் இன்று இருக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே நேற்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற உள்ள தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான அட்டவணை புயல் பாதிப்பிற்கு பின்னர் எப்பொழுது தேர்வு நடைபெறும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எனவும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17-ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து