முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல்: மக்களை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது : சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : எந்த அளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஏற்கெனவே சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், தலைமைச் செயலாளரோடு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கண்காணிப்பு அலுவலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கவனித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, எந்தளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சில முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்படவில்லை. இருப்பினும் மக்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து