முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. ராம்பூரில் திகில் சம்பவம்: இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்..!

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
UP 2023 02 03

Source: provided

லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ வைரலாகி, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டாலும், போலீசார் இன்னும் அந்த பெண்ணைக் கண்டுபிடிக்கவில்லை.

கடந்த ஜன. 29ஆம் தேதி அன்று இரவு நிர்வாணமான நிலையில், அந்த பெண் ஒருவரின் வீட்டு கதவைத் தட்டியதாகக் கூறப்படும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, ஜன. 31ஆம் தேதி, உத்தர பிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்ணையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை.

புகார் அளித்த உள்ளூர்வாசி கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்தப் பெண்ணை இரண்டு பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். இதுகுறித்து ராம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் மேலும் இதுகுறித்த விவரங்களை சேகரிக்க அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் முன்பு கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து