முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேச்சு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
CM-2 2023 03 25

Source: provided

மதுரை : தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார். 

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.  இந்த விழாவில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசியதாவது, 

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சென்னை ஐகோர்ட் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு நீதியை வழங்கியுள்ளன. காவல்துறையினர் பொதுமக்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு  நீதித்துறை உள்கட்டமைப்புக்கு ரூ. 9,000 கோடி வழங்கப்பட்டுள்ளது .ஒன்றிய அரசு நீதித்துறைக்கு வழங்கும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இ- கோர்ட் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

வருங்காலத்தில் நீதிமன்றங்களில் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணிகள் நடைபெறும். இ - கோர்ட் திட்டத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 7 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுக்கின்றனர். 

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 60 வழக்குகளுக்கு மேல் விசாரணை நடைபெறுகிறது. தொழில்நுட்ப வசதிகள் வழக்குகளை விரைவாக முடிக்க உதவும். பழமை மற்றும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும்.தமிழ்நாட்டில் ஐகோர்ட் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து