முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் என்ஜின் டிரைவர்கள் பணியின்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Smart-watch 2023 06 10

Source: provided

மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். 

இது குறித்து ரயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:- தற்போது ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு அதிகரித்துள்ளதால் புளூ டூத் தொழில்நுட்பம் மூலம் வாட்சில் கனெக்சன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்து விடும். மேலும் சில ஸ்மார்ட் வாட்ச்கள் போர்ட்டபிள் மீடியா பிளேயர்களாக செயல்படுகின்றன. 

எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து பணியாற்றுகிற போது இது போன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும் ரயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகி விடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து அனைத்து  ரயில்வே கோட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து