முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வது நாளாக நீடிக்கும் விமானிகள் ஸ்டிரைக்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 30 - ஏர் இந்தியா விமானிகளின் ஸ்டிரைக் 3 வது நாளாக நேற்றும் தொடர்வதால் 200 க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 3 ம் தேதி வரை புக்கிங் நிறுத்தப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் வெளிநாட்டு விமான பிரிவு பைலட்டுகளுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கக் கோரி உள்நாட்டு பிரிவு பைலட்டுகள் கடந்த 26 ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பைலட் சங்கத்தை சேர்ந்த 800 விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் வரை 88 விமானங்கள் ரத்தாகி உள்ளன. இன்று 3 வது நாளாக நீடித்த போராட்டத்தால் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகி உள்ளது. மும்பையில் இருந்து இயக்கப்படும் 56 விமானங்களில் வெறும் 12 விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் டெல்லியில் இருந்து 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பைலட்டுகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதனை விமானிகள் புறக்கணித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக பைலட் சங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு காரணம் ஏர் இந்தியா நிறுவனம் தான் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோர்ட் உத்தரவையும் மீறி தங்களது போராட்டத்தை பைலட்டுகள் தொடர்ந்தால் உள்நாட்டு விமானங்கள் புக்கிங்கை மே 3 ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago