முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023-09-19

Source: provided

திருப்பதி : திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. . 6-வது நாளான நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். 

அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி பக்தர்களை பரவசப்படுத்தினர். இதே போல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர்

இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று 7-வது நாளான காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

தெய்வ திருவுருவங்களுக்கு பின்னணியில் அரைவட்ட வடிவில் திகழும் அமைப்பை பிரபை என்று அழைப்பார்கள். பிரபை என்ற சொல்லுக்கு ஒளி என்பது பொருள். சூரிய ஒளி கற்றையை சூரிய பிரபை என்றும், சந்திரனின் ஒளி வெள்ளத்தை சந்திர பிரபை என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து