முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

Source: provided

திருப்பதி : டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது. மேலும் https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று பக்தர்கள் தரிசன டிக்கெட்டை பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், குறிப்பிட்ட நாளில் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வரவேற்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து