முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Modi CM 2023 04 05

புது டெல்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்  பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய நீண்டகால வாழ்க்கை மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.  உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது. அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து