முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

Potato Pizza,உருளைக்கிழங்கு பீட்சா.

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

உருளைக்கிழங்கு பீட்சா செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 3.
  2. முட்டை - 3.
  3. தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1.
  6. பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
  7. ஆரிகனா – சிறிதளவு.
  8. மோசரல்லா சீஸ் - 200 கிராம்.
  9. எண்ணெய் –  சிறிதளவு.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. ஒரு தட்டில் 3 உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி விட்டு பின்னர் நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய்  சூடானவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக  வட்டமாக வரும் படி போட்டு கடாயை  மூடி போட்டு மூடி சிறிது நேரம் வேக வைக்கவும்.
  3. ஒரு பவுலில் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து  வைத்துக்கொள்ளவும்.
  4. கலந்து வைத்துள்ள முட்டையை உருளைக்கிழங்கின் மேல் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  5. கடாயில் உள்ள எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து முட்டையை உருளைக்கிழங்கை திருப்பி போட்டு நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  6. இதனுடன் 2 ஸ்பூன்தக்காளி சாஸ் ஊற்றி பரப்பி விட்டு பொடியாக நறுக்கிய ஒரு குடைமிளகாயை  சிறிதளவு வைக்கவும்,இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் வட்டமாக நறுக்கிய ஒரு வெங்காயத்தையும் சிறிதளவு அதன் மேல் வைத்து சிறிதளவு ஆரிகனாவை தூவி விடவும்.
  7. இதனுடன் 100 கிராம் மோசரல்லா சீஸை பரவலாக துருவி போடவும்.
  8. இதனுடன் நறுக்கிய குடைமிளகாயை சிறிதளவு வைக்கவும், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காயத்தையும் பரப்பி வைக்கவும்.
  9. இதன் மேல் ஒரு பட்டர் பேப்பரை போட்டு பீட்ஸாவை மூடி கடாயையும் மூடி போட்டு மூடி 5 நிமிடம் பீட்ஸாவை நன்றாக வேக வைக்கவும்.
  10. 5 நிமிடம் கடாயை திறந்து பட்டர் பேப்பரை நீக்கி விட்டு பீட்ஸாவை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
  11. சுவையான உருளைக்கிழங்கு பீட்சா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago