முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை உடனே தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத்தரப்பு தாமதிக்காமல் உடனே பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து