முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை வடகொரிய அதிபருக்கு பரிசளித்த விளாடிமிர் புடின்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      உலகம்
KIM 2023-02-20

Source: provided

சியோல் : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை வட கொரிய அதிபருக்கு பரிசாக வழங்கியுள்ளார் அதிபர் புடின். 

ரஷ்யாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் புடின், தான் பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். 

இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. 

பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, கார் பரிசளித்த ரஷ்ய அதிபருக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து