எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அரை சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்படும் நிலையில், அந்த ஓவரை டிம் சவுதி வீசினார். அதில் முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் வந்த நிலையில், கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மிட்செல் மார்ஷ் 72 (44 பந்துகள்) ரன்களுடனும், டிம் டேவிட் 31 (10 பந்துகள்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டோனியை பார்க்க வேண்டும்: துருவ்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் அறிமுகம் ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் எதிர்வரும் 23-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் டோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள துருவ் ஜூரேல் கூறுகையில்;- 'நான் டோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் ஏற்கனவே டோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
சர்பராஸ்கான் குறித்து கங்குலி
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்பராஸ் கான் அறிமுகமாகி அசத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிப்பதில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கங்குலி. சர்பராஸ் கான் தன்னுடைய கெரியரை நேர்மறையாக துவங்கியுள்ளார். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில்தான் அவருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கும். எனவே அவர் இந்திய துணை கண்டத்திற்கு வெளியே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு குழந்தை
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திருமணம் நடைப்பெற்றது. அனுஷ்கா ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இவர்கள் வாமிகா என பெயரிட்டனர். பிறந்து சில வருடங்கள் வரை தங்களின் குழந்தையின் புகைப்படத்தை எங்குமே பதிவிடாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வரைதான் இவர்கள் தங்களின் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தனர்.
தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களையும் அடிக்கடி சந்திப்பர். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா கேம்ராவின் கண்களில் படாமல் இருந்தார்.
கம்பேக் கொடுக்கும் சேவாக்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் போன்று எஸ்ஏ20 லீக், கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தான் இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் எனப்படும் ஐவிபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் விவிஐபி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
ஜெய்ஸ்வால் குறித்து நாசர் உசேன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார். டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது., அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும். அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
குரோசிய வீராங்கனை சாம்பியன்
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: ராமதாஸ் உறுதி
17 Jul 2025விழுப்புரம், ''ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வரிவிதிப்பு முறைகேடு விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு: ஐகோர்ட்டு கிளை
17 Jul 2025மதுரை, மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
-
ஈராக்; வணிக வளாகத்தில் தீவிபத்து: 60 பேர் உயிரிழப்பு - பலர் படு காயம்
17 Jul 2025பாக்தாத், ஈராக்கில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
ராகுலின் ரேபரேலி பயணம் ரத்து
17 Jul 2025ரேபரேலி, ரேபரேலி பயணத்தை ராகுல்காந்தி ரத்து செய்தார்.
-
பாகிஸ்தானில் கனமழைக்கு 124 பேர் பலி
17 Jul 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கனமழைக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்தனர்.
-
அரியானாவில் 2 முறை நிலநடுக்கம்
17 Jul 2025சண்டிகர், அரியானாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.