முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுடனான போரில் ரஷ்யா வெற்றி பெற கூடாது : பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      உலகம்
Emmanuel-Macron-2023-11-11

Source: provided

லண்டன் : உக்ரைனுடனான போரில் ரஷ்யா வெற்றி பெற கூடாது  என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். 

கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.

உக்ரைனிடம் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷ்ய ராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார். 

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்ததாவது,

இப்போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம். ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்ய மக்களுடன் அல்ல. குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும். உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்.இவ்வாறு மேக்ரான் கூறினார்.

சில தினங்களுக்கு முன், ரஷ்ய அதிபர் புடின், நேரடியாக மேற்கத்திய நாடுகளின் ராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும், நேட்டோ கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து