முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2050-க்குள் சுற்றுச்சூழல் மாசு வெளிப்பாட்டை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர ஸ்பெயின் திட்டம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      உலகம்
Spain 2023-02-28

Source: provided

மேட்ரிட் : 2050 வருட இறுதிக்குள் ஸ்பெயினில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வெளிப்பாடுகளை பூஜ்ய  நிலைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது

கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசடைவதால் பருவநிலை மாற்றங்கள் அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் உலகெங்கும் பிரசாரம் செய்து வந்தனர். 

சில வருடங்களாக வானிலை தட்ப வெப்பத்தில் கடும் ஏற்ற இறக்கங்களும், அதிக வெப்பம், பனிப்பொழிவு, மழை, வெள்ளம் என எதிர்பாராத மாற்றங்களும் உலகின் பல நாடுகளில் ஏற்படுவதால், இத்தகைய கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்று வருகின்றன. 

இதனால், பல உலக நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்கும் விதமாக மாற்று எரிசக்தி வழிமுறைகளை உள்ளடக்கிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருகின்றன. 

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் விமான சேவைகளினால் அதிகரிக்கும் கரியமில வாயு  சுற்றுச்சூழலை பாதிப்பதை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், ரயில் மூலம் கடக்கக் கூடிய தூரங்களுக்கும் பொதுமக்கள் விமான சேவையை பயன்படுத்துவதை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பல தனியார் ஜெட் விமான சேவைகளும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

2050 வருட இறுதிக்குள் ஸ்பெயினில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வெளிப்பாடுகளை பூஜ்ய  நிலைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, அதிநவீன ரயில் இருப்புப்பாதை கட்டமைப்பில் ஸ்பெயின் பெருமளவு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எடுத்துக்காட்டாக, பிற நாடுகளை விட 3 மணி நேர ரயில் பயணத்தில் ஸ்பெயினில் அதிக இடங்கள் செல்ல முடியும். இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் 21,000 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

அதே நேரத்தில், ஆண்டிற்கு 3 லட்சம் டன்கள் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும். குறுகிய தூர உள்ளூர் விமான சேவைகள் இல்லாமல் நீண்ட தூர விமான சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது என விமான போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம், மற்றோரு ஐரோப்பிய நாடான பிரான்ஸ், இத்திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து