முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகள் : பிரதமர் நரேந்திரமோடி தாக்கு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

தான்பாத் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள்” என்று பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் ரூ,35 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சிக்கு மிகப் பெரும் எதிரிகள். கடந்த நூற்றாண்டின் இறுதியில் வடக்கு கரண்புராவில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அவர் அறிவித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2014-ல் நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அந்தத் திட்டத்தை செயல்படுத்த வாக்குறுதி அளித்தேன். இன்று இங்கே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த மின் நிலையத்தால் ஒளிர்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சி பெறவும், சட்டம் - ஒழுங்கு சீராகவும் இங்கே ஒரு நேர்மையான அரசு அமைவது அவசியம்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் அரசு இங்கே வாரிசு அரசியல் செய்கின்றன. இந்த ஆட்சியின் கீழ் பணப்பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கே அதிகாரத்தில் உள்ளவர்கள் மலைபோல் சொத்துகளைக் குவித்துள்ளனர். ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜார்க்கண்ட் என்றால் நிலக்கரி குவியல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இங்கே காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஒருவர் வீட்டில் குவியல் குவியலாக பணம்தான் கிடைத்தது. அவையெல்லாம் மக்களாகிய உங்களின் பணம். உங்கள் பணத்தை சூறையாடியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். நீங்கள் எனது மக்கள். உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து