எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில் சீரழிந்துவிட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக நெல்லை பிரசாரக் கூட்டத்தில் குற்றச்சாட்டினார்.
நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இன்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூகநீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. ஒன்றை விட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடிய போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70 சதவீத மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். நாட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; பணக்காரர்களின் கடனே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் அனைத்தும் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது.
அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை அதானி வசம் ஒப்படைக்கிறார். நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்.எஸ்.எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் தகுதி உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம்.
மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும். தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இன்டியா கூட்டணி வைத்துள்ளது. வறுமையின் பிடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய மீனவர்களின் நலனை பிரதமர் மோடி முற்றிலும் மறந்து விட்டார்.
ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழக வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
17 Feb 2026சென்னை, தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை நேற்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
-
இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவுமே இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
17 Feb 2026சென்னை, தமிழக அரசிந் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவும் இல்லை என்றும் அத்திப்பழம் போன்று சொத்தையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைப்பு: தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
17 Feb 2026சென்னை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்
17 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என அனைவரும் பாராட்டு: இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
17 Feb 2026சென்னை, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளோம் என்றும், தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.



