எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவிஎம் மீதான சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் நேற்று (வெள்ளிக்கிழமை) பதில் அளித்தார். அவர் கூறுகையில், "இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இவிஎம்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. அவை குறித்து சுப்ரீம் கோர்ட்டும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் போலி வாக்குகள் பதிவாகின்றன என்று கூறுகின்றனர்.
தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் என பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளன. எனவே வாக்களார்கள் வாக்களிப்பதில் மட்டும் களிப்புறட்டும். இது வாக்களித்து மகிழ்ந்திருக்கும் தருணம். எதையும் சந்தேகிக்கும் நேரம் இல்லை. வாக்காளர்களின் வாக்குகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வர வேண்டும்" என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "சில இடங்களில் மழை பெய்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்கின்றனர் என்று களத்தில் இருந்து எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரும் வாக்குச்சாவடியை நோக்கி விரைகின்றனர். ஜனநாயகத்தின் திருவிழாவில் மக்கள் வெகுவாக பங்கேற்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாரம்பரியமாக வாக்குப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளில் இளைஞர்கள், பெண் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்க செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய திட்டத்தை வகுத்தது. உள்ளூர் சூழலைப் பொறுத்து அதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு பிரபலங்கள், பெட்ரோல் பம்புகள், வங்கிகள், தபால் நிலையங்கள் என பல்வேறு நிறுவனங்கள் இதில் இணைந்து பணியாற்றின.
மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இளைஞர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள் என எல்லா தரப்பு மக்களையும் ஜனநாயக திருவிழாவில் இணைந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வாக்களிப்பது உங்களின் உரிமை, உங்களின் கடமை, உங்களின் பொறுப்பு, அது உங்களின் பெருமை" என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது சக தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.எஸ். சந்து ஆகியோருடன் இணைந்து டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உருவாக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்தல் நடைமுறைகள் கண்காணித்தார். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


