முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் சடங்கில் திவ்யா கலந்து கொண்டால் பாதுகாப்பு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 -  இளவரசனின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி திவ்யா கலந்து கொள்ள விரும்பினால் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4-ந் தேதி ரெயில் தண்டவாளத்தில் மூளைச்சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து 5-ந் தேதி காலை 5 பேர் கொண்ட குழுவினர் இளவரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இளவரசன் தரப்பை சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தனர்.

அதை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள் இளவரசனின் பெற்றோர் மறு பிரேத பரிசோதனை செய்ய சொன்னால் செய்வதற்கு தயாராக இளவரசனின் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகளை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை செய்த அன்று இரவு 9.30 மணிக்கு இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் அவரது பெற்றோருக்கும் அந்த நகல் கொடுக்கப்பட்டது. இளவரசனின் பிரேத பரிசோதனையை பார்த்த அவர்களது வக்கீல்கள் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவில் 2 பேர் சரியாக செயல்படவில்லை என்று குறிப்பிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இளவரசனின் பிரேதத்தை மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அதையொட்டி இளவரசனின் உடலை மறு பிரேதப் பரிசோதனை தொடர்பாக இளவரசன் நண்பர்கள் சார்பில் நேற்று  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தனபாலம், செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மீண்டும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவினை மருத்துவ வல்லுநர் குழு ஆய்ந்து முடிவு செய்யும். மத்திய, மாநில, இளவரசன் தரப்பு மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள் அதன் பின்னர் நாளை (இன்று)இது குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திவ்யாவுக்குப் பாதுகாப்பு:

இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினால், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம்  திவ்யா தரப்பினர் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையை கணக்கில் எடுத்துக் கொண்டு மனு குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யலாம். அவ்வாறு அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும் அங்கே 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இளவரசனின் உறவினர்கள் அதிகம் பேரால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாமல் உள்ளது என்று, வழக்குரைஞர் வைகை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நபர்கள் , மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கலாம். அதற்குத் தகுந்த வகையில் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago