முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை கடும் உயர்வு

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Kasimedu 2023-07-23

Source: provided

கோவை : மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான மீன்கள் விலை நிலவரம் கிலோவில் வருமாறு: வஞ்சிரம் ரூ.1200, மத்தி ரூ.200, நெத்திலி ரூ.250, ஊழி ரூ.400, அயிலை ரூ.250, கிழங்கா ரூ.100, சங்கரா ரூ.300, கடல் இறால் ரூ.500, வளர்ப்பு இறால் ரூ.400, கட்லா, ரோகு, நெய்மீன் தலா ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து