முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம், வெள்ளி விலை சரிவு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்து விற்பனையானது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்து இருந்தது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்த நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து முதல் முறையாக கிராம் ஒன்றுக்கு 101 ரூபாயை எட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் விலை குறைந்து 6,860 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 2 ரூபாய் விலை சரிந்து 99 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து