முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் எதிர்க்கட்சி தலைவரான பட்நாயக்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      இந்தியா
Naveen-Patnaik 2023-07-23

புவனேஸ்வர், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் அங்கு 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில எதிர்க்கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நவீன் பட்நாயக் இதை தெரிவித்தார். அவர் கூறும்போது, 'பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக என்னை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து