முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி : மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2ம் நாளான ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஜூலை 21ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பாராளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 1993ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி காங்கிரஸ் பேரணியின்போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான அரசில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது காங்கிரஸ் இளைஞரணி தலைவியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் பேரணி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவான பின்னரும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்து வகையில் ஆண்டுதோறும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பேரணி நடத்தப்படுவதால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து