முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அடுத்த வாரம் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      தமிழகம்
Vijay 2024-02-18

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி  உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை . 

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக  அறிவித்துள்ள விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் ஏற்கனவே  உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி  உள்ளது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். 

இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய   பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அடுத்த வாரம்  கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து