முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கடாய் பன்னீர்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கடாய் பன்னீர் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பன்னீர் - 200 கிராம்.
  2. மல்லி - 2 ஸ்பூன்.
  3. மிளகு – 6.
  4. கிராம்பு – 5.
  5. சோம்பு - ஒரு ஸ்பூன்.
  6. சீரகம் -  ஒரு ஸ்பூன்.
  7. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  8. பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
  9. ஏலக்காய் – 3.
  10. மேங்கோ பவுடர் - ஒரு ஸ்பூன்.
  11. பட்டர் - ஒரு ஸ்பூன்.
  12. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  13. நறுக்கிய சின்ன வெங்காயம் – 10. 
  14. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/2.
  15. மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்.
  16. கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்.
  17. நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
  18. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  19. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  20. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் மல்லி,6 மிளகு,5 கிராம்பு,ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.எண்ணெய்  சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு நன்றாக வதக்கி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வைத்துக்கொள்ளவும்.
  4. வறுத்து வைத்துள்ள மல்லி,மிளகு,கிராம்பு,சோம்பு,சீரகம் ஆகியவற்றை ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு இதனுடன் 3 ஏலக்காயை எடுத்து அதன்  உள்ளே உள்ள விதைகளை மட்டும்  இதனுடன் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு மிஸ்சி ஜாரில் வதக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி மற்றும் மல்லி,மிளகு,கிராம்பு,சோம்பு,சீரகம் ஆகியவற்றை போட்டு  அரைத்த பொடியையும் போட்டு கொள்ளவும்.
  6. இதனுடன் ஒரு ஸ்பூன் மேங்கோ பவுடரை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்,பட்டர் உருகியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் நறுக்கிய 10 சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் பொடியாக நறுக்கிய பாதி குடை மிளகாயை போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  11. போட்டு வதக்கவும்.
  12. இதனுடன் 2 பசசை மிளகாயை நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும்.
  13. இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  14. இதனுடன் மிஸ்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு வதக்கவும்.
  15. இதனுடன் மிஸ்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவி ஊற்றி கலந்து கொள்ளவும்.
  16. நறுக்கிய 200 கிராம் பன்னீரை போட்டு கலந்து விடவும்.
  17. சிறிதளவு மல்லி இலையை தூவி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
  18. சுவையான பன்னீர் சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago