முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு : மாலத்தீவு அதிபர் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
Maldives 2024-10-08

Source: provided

லக்னோ : காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 6-ம் தேதி இந்தியா வந்துள்ளார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். 

அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்வு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து முகமது முய்சு பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முகமது முய்சு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். 

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்நிலையில், முகமது முய்சு தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகாலுக்கு தனது மனைவியுடன் சென்றார். 

அவரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சார்பில், மாநில  அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து தனது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிட்ட முகமது முய்சு, அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். 

அவரது வருகையை முன்னிட்டு தாஜ்மகாலில் நேற்று காலை 8 முதல் 10 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தாஜ்மகாலை பார்வையிட்ட பிறகு முகமது முய்சு பார்வையாளர்கள் புத்தகத்தில், 

தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். வார்த்தைகள் இதற்கு நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று எழுதியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து