முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம் : அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      உலகம்
Iran 2024-03-17

Source: provided

டெக்ரான் : ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம் என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று ஈரானின் மூத்த தலைவர் சயீத் அலி ஹொசைனி கமேனி கூறியிருப்பதாவது: 

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு, மத்தியில் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம். அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து