முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பாடல் வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      உலகம்
A R Rahman 2023-09-11

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக் கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (வயது 59) களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாக உள்ளது. ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பான ஏ.ஏ.பி.ஐ.(AAPI) இதுகுறித்த அறிவிப்பையும், டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிசை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார். கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக்கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற சில பாடல்கள், அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து